தூத்துக்குடி சிஎம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 139 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன. இந்நிலையில், தூத்துக்குடி ரங்கநாதபுரம் சிஎம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ. மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி தாளாளர் வள்ளியம்மாள் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மகளிர் மற்றும் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், 56 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வித்துறை சார்பில் கணேசன், சிஎம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வள்ளியம்மாள், நிர்வாக குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, ஆறுமுகம், சோமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்


