தூத்துக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று (20.08.2024) காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாநகராட்சி புதுகிராமத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை பன்முக மருத்துவமனையினை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் குத்துவிளக்கேற்றினார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) சஞ்சீவ் குமார், மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


