தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பாக 80 வது சுதந்திர தினத்தினையொட்டி சுதந்திர நாட்டில் ஜனநாயகத்தின் நிலை? அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதில் நமது பங்கு? என்ற தலைப்புகளில் நடந்த கருத்தரங்கு மாவட்ட தலைவர் முனைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
மக்கள் சிவில் உரிமை கழகத்தின் முன்னாள் செயலாளரும் மாநில குழு உறுப்பினருமான பாத்திமா பாபு முன்னிலை வகித்தாா். வழக்கறிஞர் பிரிட்டோ கருத்துரையாற்றினாா். மக்கள் சிவில் உரிமை கழகத்தின் செயலாளர் வழக்கறிஞா் ராஜா வரவேற்புரை ஆற்றினார்.
அரசியல் சாசனத்தில் உள்ள நமது அடிப்படை உரிமைகள் பற்றிய விபரங்கள் மட்டும் அல்லாது ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பு குறித்த அறிய விதிகள் மற்றும் சட்ட குறிப்புகள் பற்றிய விரிவான விளக்கங்கள் கொடுத்ததோடு கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்களின் சந்தேகங்கள், கேள்விகளுக்கும் பதில் மற்றும் விளக்கங்கள் அளித்ததில் அரசியல் சாசனம் குறித்த விழிப்புணர்வு கிடைக்க பெற்றனா்
சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் பிரிட்டோவுக்கு பியுசிஎல் மாவட்ட தலைவர் முனைவர் செல்வராஜ், பேராசிரியை பாத்திமாபாபு ஆகியோா் நினைவு பாிசு வழங்கினார்கள். மாவட்ட செயலாளர் வழக்கறிஞா் ராஜா நன்றி கூறினாா்.


