தூத்துக்குடி முத்தையாபுரம் கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 36-வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்குத் தமிழ்நாடு மின்சார வாரிய மேலாளர் ராஜமணி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் சிறப்பு முன்னிலை வகித்தார். முன்னதாக, பள்ளிச் செயலாளர் ஜீவன் ஜேக்கப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விளையாட்டு விழாவையொட்டி, பள்ளி மாணவ-மாணவிகள் 4 வண்ணப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டன. போட்டிகளின் முடிவில் நீல நிறப் பிரிவு மாணவ-மாணவிகள் அதிக புள்ளிகள் பெற்றுச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குத் தமிழ்நாடு மின்சார வாரிய மேலாளர் ராஜமணி பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பெரியசாமி கல்வி அறக்கட்டளை உறுப்பினர் மகிழ் ஜீவன், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் பலர் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவில் பள்ளி முதல்வர் சித்ரா நன்றியுரையாற்றினார்.


