தமிழகத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் பல்வேறு இடங்களில் சுற்றி வருகிறார்கள் என தகவல்கள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலை தெருவை சேர்ந்த 8 ஆம் வகுப்பு படிக்கும் நம்பிராஜன் என்ற சிறுவன் வயல்வெளியில் தனது பாட்டிக்கு உதவி செய்து விட்டு புல்லுக்கட்டை வாங்கி கொண்டு தனியாக வீட்டிற்கு வந்துள்ளான்.
அப்போது செய்துங்கநல்லூர் சிவன் கோயில் அருகே நின்ற மர்ம நபர் ஒருவர் பர்தா அணிந்து கொண்டு, சாக்லெட் கொடுத்து அந்த சிறுவனை அழைத்துள்ளார். அதன்பின்னர் அந்த மாணவனை கையை பிடித்து இழுத்துள்ளார். தொடர்ந்து அந்த சிறுவனை கடத்த முயற்சி செய்துள்ளான். ஆனால் சுதாரித்துக் கொண்ட அந்த சிறுவன் அங்கிருந்து தப்யோடி அருகில் கோயில் நின்றவர்களிடம் தகவல் தெரிவித்துளளார்.
உடனே அவர்கள் அந்த வாலிபரை விரட்டி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவன் அங்கிருந்து தப்பியோடி குளத்துக்குள் மறைந்து விட்டான். இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் செய்துங்கநல்லூர் போலிசார் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஓடி மறைந்த வாலிபரை தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


