தூத்துக்குடியில் ஏதேனியா தரமான செக்கு எண்ணெய் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையம் தொடக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் கோரம்பள்ளத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘ஏதேனியா’ ஆரோக்கியமான செக்கு எண்ணெய் நிறுவனத்தின் புதிய விற்பனை நிலையம், 3-வது மைல் தமிழ்ச்சாலையில் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய கிளைத் தொடக்க விழாவிற்கு நிறுவனத்தின் உரிமையாளர் செல்வி தலைமை தாங்கினார். போதகர் கிதியோன் ஆன்டர்சன் சிறப்புப் பிரார்த்தனை செய்து புதிய நிலையத்தைத் திறந்து வைத்தார். முதல் விற்பனையை தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வீட்டுவசதி சங்க செயலாளர் பி.ஜெபராஜ் பெற்றுக்கொண்டார்.
இந்த விற்பனை நிலையத்தில் சமையலுக்குத் தேவையான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவை 100% தூய்மையான முறையில், எவ்விதக் கலப்படமும் இன்றிச் செக்கு மூலம் தயாரித்து வழங்கப்படுகின்றன. குறிப்பாக, நல்லெண்ணெயில் கருப்பட்டி சேர்த்துத் தரமான முறையில் உற்பத்தி செய்யப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
வாடிக்கையாளர்கள் நேரில் வந்து எண்ணெய் ஆட்டும் முறையைப் பார்வையிட்டு வாங்கிச் செல்லும் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு.
மேலும், வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளை ஆன்லைன் (https://www.edeniaoils.com/) வாயிலாகவும் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி புதுக்கிராமம் எபனேசர் ஸ்டோரில் ஏதேனியா தயாரிப்புகள் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


