வெள்ளூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் கைப்பந்து போட்டி நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எஸ்எப்சி இளைஞரணி சார்பில் மாபெரும் கைப்பந்து போட்டி நடந்தது.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வீரர்களுக்கு கை கொடுத்து இந்த போட்டியை தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான அணிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.


