ஏரலில் விஸ்வகர்மா கொடியேற்றம் விழா
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் நகரில் விஸ்வகர்மா கலை வளாகத்தில் விஸ்வகர்ம ஐவர்ண அனுமன் கொடி ஏற்றப்பட்டது.இது ஐந்தாமாண்டு நிகழ்ச்சியாகும்….RSS பிரமுகர் மந்திரக்குமார் ஆச்சாரி ,பிஜேபி பொறுப்பாளர் முத்துமாலை ஆச்சாரி ஆகியோர் தலைமை வகித்தனர்.ராமலிங்கம் ஆச்சாரி, நகைமதிப்பீட்டாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர். ஏரல் EX எல்லை பாதுகாப்பு படை வீரர் வெங்கடேஷன் ஆச்சாரி அவர்கள் கொடியேற்றினார்கள்.மணி (எனாமல்),ஹரி (ஆனந்த் ஜுவல்லரி),கற்குவேல ஐயப்பன் (பசி போக்கும் தளம்)மாணவச் செல்வங்கள் முத்துராம், சந்தன, ஹரிஸ்,சிவா,போன்றோர் கலந்து கொண்டனர்.தென்கரை மகாராஜன் (யோகா ஆர்வலர்) அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.விழா ஏற்பாடு செய்தகவிஞர் ஏரல் ராஜன் நன்றியுரை ஆற்றினார்.


