
செய்துங்கநல்லூரில்
புதிய பள்ளிக் கட்டிடம் திறப்பு விழா
செய்துங்கநல்லூரில் புனித அடைக்கல அன்னை கன்னியர்கள் சபை சார்பில் குழந்தை ஏசு மழலையர் பள்ளி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிநடந்து , அதற்கான திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்குப் பள்ளி தாளாளர் அருட்சகோதரி ரமணி பாய் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை நம்பிக்கை மேரி வரவேற்றார். கட்டிடத்தினை புனித அடைக்கல அன்னையின் சபை தலைமை அன்னை சகோதரி மரிய பிலேமீனாள் திறந்து வைத்தார். செய்துங்கநல்லூர் ஆர்.சி. பங்கு தந்தை ஜாக்சன் அருள் சிறப்பு ஜெபம் செய்து கட்டிடத்தினை அர்ச்சித்தார். திண்டுக்கல் தலைமை சகோதரி லீமா வாழ்த்துரை கூறினார். முன்னாள் தலைமை ஆசிரியை ஜெயதீபா நன்றி கூறினார்.