தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் விபத்து – 2 பேர் பலி.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணியில், வடிகால் அமைக்கும் பணி பிரதானமாக நடக்கிறது. அந்த பணியில் ஈடுபட்டபோது சுவர் இடிந்து விழுந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.
தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியில் வடிகாலுக்காக(கழிவுநீர்கால்வாய்) குழிதோண்டும் பணி கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த 21 தொழிலாளர்கள் அப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுந்தரவேல்புரம் 2வது தெருவில் இன்று அப்பணி நடைபெற்றது. அதில் 7 பேர் பணியிலிருந்தனர். ஜே.சி.பி மூலம் குழி தோண்டும் போது எதிர்பாரா வ்மீன் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனத்தின் வாகனம் நிறுத்துமிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. அதில் கம்பி கட்டும் பணியில் இருந்தவர்கள் அதில் சிக்கி கொண்டனர். பஜிரத் அலி(23), அமித் (21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பணியாளர்களின் முழு விபரங்கள், அவர்களின் பாதுகாப்பு குறித்து காவல்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்


