ஆழிகுடி RC துவக்கப்பள்ளியில் இன்று 75- வது சுதந்திர தின விழா நடைபெற்றது. ஒன்றிய கவுன்சிலர் சுடலைமுத்து தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.தலைமையாசிரியர் ஜெசி அனைவரையும் வரவேற்றார். இறைவணக்கம்,தமிழ்தாய் வாழ்த்து,கொடிப்பாடல் பாடப்பட்டது . நாட்டார்குளம் பங்குதந்தை அம்புரோஸ் மற்றும் மணப்பாடு பங்குதந்தை இன்பெண்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக சேவகர் தினேஷ் சிறப்புரையாற்றினார். ஆசிரியர் லூயிஸ் வாழ்த்துரை ஆற்றினார் . ஊர் பெரியோர்கள் பலர் கலந்து கொண்டனர்.


