நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கீழ ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் பேச்சிமுத்து வயது(37),இவர் ரயில்வே துறையில் டிராக்கிங் அமைக்கும் வேலை செய்து வருகிறார்.தற்போது பணிக்காக குடும்பத்துடன் ஆறுமுகநேரி பாபு காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருகிறார்.
தற்போது நெல்லையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயில் வழித்தடத்தில் டிராக்அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் ஒரு பகுதி ஆழ்வார்திருநகரி அருகே உள்ள திருக்களூரில் நடந்துவருகிறது.
திருக்களூரில் பேச்சிமுத்துவும் வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் திருக்களூரில் இருந்து செய்துங்கநல்லூருக்கு ரயில்வே டிராக் அமைப்பதற்கான தளவாட பொருட்களை எடுப்பதற்காக பணியாளர்களுடன் பேச்சிமுத்துவும் சென்றனர். செய்துங்கநல்லூரில் பொருட்களைஏற்றி விட்டு பணியாளர்களுடன் கருங்குளம் பேருந்துநிறுத்தத்தை அடுத்த சுடலை மாடசாமி கோவில் அருகே வண்டியை நிருத்திவிட்டு அங்குள்ள ஆற்றில் கைகால்களை கழுவுவதற்காக பேச்சிமுத்து மற்றும் அவருடன் வேலைபார்க்கும் முத்துராஜ், சாமிநாதன், ராஜா ஆகியோருடன் ஆற்றில் இறங்கி கைகால்களை கழுவினர். அப்போது பேச்சிமுத்து கைகளை கழுவியவாறு ஆழம் தெரியாமல் தண்ணீரில் இறங்கியுள்ளார். எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் இழத்து செல்லப்பட்டார். உடனே அவருடன் பணியாற்றுபவர்கள் கூச்சலிட்டனர். அவரை காப்பாற்ற முடியவில்லை இதனையடுத்து அவர்கள் ஶ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையத்திற்கும் ஶ்ரீவைகுண்டம் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்புதுறையினர் ஆற்றில் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போதுகொங்கராயக்குறிச்சி ஆற்றின் தெற்கு பகுதியான மெயின் ரோடு அருகே உள்ள ஆற்றில் அவரது உடல் கிடப்பதை கண்ட தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். ஶ்ரீவைகுண்டம் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது குறித்து ஶ்ரீவைகுண்டம் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பேச்சிமுத்துக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.


