
சங்கரன்கோயிலில் அரவிந்த் செல்வன் இயக்கிய எழுமை குறும்படம் வெளியிடப்பட்டது. சங்கரன்கோயில் ஜோதி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கருப்புசாமி தலைமை வகித்தார். சங்கரன் கோயில் வட்டார கல்வி அலுவலர் சந்திரசேகர் தாமரைக் கழகம் நிறுவனர் சொ.வீரபாகு,உத்தண்டராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். படத்தின் உதவி இயககுனர் சுப்பிரமணியன் வரவேற்றார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சிகாமராசு, சங்கரன்கோயில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்தனகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார். தென்காசி மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கருப்புசாமி குறும்படத்தினை வெளியிட தாமரைக் கழகம் நிறுவனர் சொ.வீரபாகு பெற்றுககொண்டார். படம் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மூத்த தமிழாசிரியர் இராதாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். படத்தின் திரைக்கதை வசனம் எழுதிய அபிஷ்விகனேஷ் நன்றி கூறினார்.