
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயமும் ஒன்று. இந்த கோவிலில் வருடம் தோறும் திருவாதிரை திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். ஆனால் கடந்த 2 வருட காலமாக கொரோனா அச்சுறுத்தலால் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
தற்போது உள்ள சூழலில் கொரோனா அச்சுறுத்தல் குறைந்த காரணத்தினால் தமிழக அரசு திருவிழாக்களை கட்டுப்பாடுகளுடன் நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலையில் செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையட்டி 10 ந்«தி காலை 7.30க்கு மேல் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை , புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ஆவாஹந திக்பலி, ரக்ஷா பந்தனம், கொடி பிரதட்ணம், தீபாராதனை நடந்தது.
முதல் நாள் மண்டகப்படடி செய்துங்கநல்லூர் பட்டன் மூப்பனார் குடும்பத்தினர் மூலம் நடந்தது. இதையட்டி காலை 7.30 மணிக்கு முதல் நாள் யாகசாலை பூஜைகள் ஆரம்பம். அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, விசேஷஹோமம், கொடி பட்டம் அபிஷேகம், பஞ்சமூர்த்தி தீபாராதனை , கொடி மரம் தீபாரதனை நடந்தது. இதற்காக கொடிப்பட்டம் முதல் நாள் இரவு ஊர்வலம் வந்தது. கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்தது. அதன் பின் சுவாமி, சிவகாமி அம்மன், நடராஜர், நந்தி ஆகியோருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம், ஆராதனை நடந்தது. பெருங்குளம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச ஞானதேசிக சுவாமிகள் முன்னிலையில் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியேற்று விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
திருவிழா நடைபெறும் 10 தினங்களும் காலையும் மாலையும் யாகசாலை பூஜை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா எழுந்தளும் நிகழ்ச்சியும், திருநடன தீபாராதனையும் நடைபெறுகிறது. கோயில் பூஜைகளை வெங்கடாசலம் வாத்தியார், முத்துராமன் உள்பட குழுவினர் செய்து வருகின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆன்மீக பேரவையினர் செய்து வருகின்றனர்.
&&&&