1898 – அமெரிக்கப் படைகள் புவெர்ட்டோ ரிக்கோவின் மயாகெஸ் நகரினுள் நுழைந்தன.
1920 – லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஏற்பட்டது.
1954 – கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.
1960 – பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது.
1965 – கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1968 – பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.
1972 – வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர்.
1975 – போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் “மாரியோ லெமொஸ் பிரெஸ்” தலைநகர் டிலியை விட்டுத் தப்பினார்.
1984 – வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: “எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்”.
1999 – ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
2003 – ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.
2003 – ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.
2006 – யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.


