தூத்துக்குடி சந்தன மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.
தூத்துக்குடி வடபாகம் கோயில் பிள்ளைவிளை 6 வது வார்டுக்கு உட்பட்ட அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று மதியம் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை அஇஅதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தகஅணி செயலாளர் துரைசிங், வட்ட செயலாளர், அருண்குமார், வட்ட நிர்வாகி அய்யப்பன், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள், ராஜேந்திரன், பேச்சியப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, முன்னாள் வட்ட செயலாளர்கள், அம்பை முருகன், பாக்யராஜ், பாலமுருகன், கவுன்சிலர் பெருமாள் தாய், மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர் .


