குமிழ்முனை புத்தக வண்டியின் இரண்டாவது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்கும் விதமாக குமிழ்முனை வாசிப்பு வண்டி புத்தகத்தால் அலங்கரிக்கப்பட்டு. காட்சி படுத்தப்பட்டது. குமிழ்முனை பதிப்பகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களும் மக்களின் பார்வைக்காகவும் மற்றும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டது. அரங்கம் முழுவதும் குமிழ்முனை கடந்து வந்த பாதையை புகைப்படமாக காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் அரங்கமானது குமிழ்முனை எழுத்தாளர்களின் புகைப்படம் மற்றும் அவர்களின் வாசகங்களால் அலங்கரிக்கப்பட்டது.
நிகழ்வின் தொடக்கமாக எழுத்தாளர் மோர்ஜியா அவர்கள் அனைவரையும் வரவேற்று துவக்கவுரை வழங்கினார். தொடர்ந்து எழுத்தாளர் சுபசூரியா அவர்கள் குமிழ்முனையின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
அதனை தொடர்ந்து கலைவளர்மணி சக்திவேல் அவர்கள் நெடுஞ்சாலை கவிஞர். செல்வராஜ் அவர்கள் எழுதிய வாழ்த்து செய்தியை வாசித்தார்கள்.
இவ்விழாவில் கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றார்கள். வந்திருந்த அனைவரையும் சிறப்பு விருந்தினராக ஏற்று இவ்விழா செவ்வனே நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து போராட்ட வீரர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது வாழ்க்கை வரலாற்றை சிறுபுத்தகமாக எழுதிய எழுத்தாளர் கார்முகில் அவர்களின் “செவ்வஞ்சலி” கட்டுரை தொகுப்பு தேரிக்காடு இலக்கியவாதி திரு கண்ணகுமார விஸ்வரூபன் ஐயா அவர்கள் கரங்களால் வெளியிடப்பட்டது. அதன் முதல் பிரதியை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஐயா அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். மேலும் தேரி காட்டு இலக்கியவாதி கண்ணக்குமார் விஸ்வரூபன் ஐயா அவர்கள் தனது எழுத்து பயணத்தை இளம் எழுத்தாளர்கள் மத்தியில் சிறப்பாக பகிர்ந்து கொண்டார்கள் .முத்தாலங்குறிச்சி காமராஜர் ஐயா அவர்கள் இளம் எழுத்தாளர்கள் அளவு சமூகத்தின் பக்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும் என்பதனை குறித்தும், தனக்கும் குமிழ்முனைக்கும் இடையேயான தொடர்பை குறித்தும் சிறப்புரையாற்றினார். “செவ்வஞ்சலி” புத்தகம் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசாக குமிழ்முனை பதிப்பகத்தால் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வருகை புரிந்திருந்த வாசகர்கள் அனைவரையும் பாராட்டி, புத்தகம் பரிசளிக்கப்பட்டது.
பரிசு வாங்கிய வாசகர்கள் குமிழ்முனைக்கு பிறந்தநாள் வாழ்த்து செய்தி கூறினார்கள் மற்றும் குமிழ்முனையின் வளர்ச்சி குறித்தம் தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.
முதலாவது எழுத்தாளர் மோர்ஜியா அவர்கள் எழுதிய “பெண்ணே பெண்ணாய் இரு” கட்டுரைத் தொகுப்பு ஆழி மாத இதழின் ஆசிரியர் அருட் தந்தை திரு.சபின்சன் அவர்கள் கரங்களால் வெளியிடப்பட்டது. புத்தகத்தின் முதல் பிரதியை வ.உ.சி கல்வியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர். குரு ராஜதுரை ஐயா மற்றும், மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் கனிமொழி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் ஆசிரியர் ஏற்புரை வழங்கினார்கள்.
அடுத்ததாக, எழுத்தாளர் சுபசூரியா ரவிக்குமார் அவர்கள் எழுதிய “கடல் கதாநாயகி” நாவல் சி.எம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சங்கரேஸ்வரி அவர்கள் கரங்களால் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை முத்துலெட்சுமி மற்றும் பபிலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பின்னர் ஆசிரியர் ஏற்புரை வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற குமிழ்முனையின் எழுத்தாளர்கள்அனைவருக்கும் சான்றிதழும் கேடயமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டார்கள். புலவர் சங்கரலிங்கம் ஐயா அவர்கள் இளம் எழுத்தாளர்கள் எப்படி எழுத வேண்டும் என்பதனை குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்வின் இடையில் அனைவருக்கும் பின்னூட்ட கருத்து படிவம் வழங்கப்பட்டது. அனைவரும் அதை எழுதி பெட்டியில் போட்டவுடன், குலுக்கல் முறையில் ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு குமிழ்முனை வண்டியில் இருந்து அவர்களுக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறி, அப்புத்தகத்தை அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அடுத்ததாக குமிழ்முனை பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எழுத்தாளர் சைமன் அவர்கள் எழுதிய “குளிர் உதடுகள்” சிறுகதை தொகுப்பு குமிழ்முனை எழுத்தாளர்கள் வெளியிட குமிழ்முனை வாசகர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்ந்து சைமன் அவர்கள் ‘குமிழ்முனையில் 50 எழுத்தாளர்களை உருவாக்கி பின் தனது புத்தகத்தை வெளியிட விரும்பியதாகவும் ஒரே ஆண்டில் 100 எழுத்தாளர்களை உருவாக்கியதாகவும் இன்று என் புத்தகம் வெளியாவதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று தனது ஏற்புறையில் குறிப்பிட்டார்கள்.
கலையின் குரல் அமைப்பின் நிறுவனர் கலை வளர்மணி பா. சக்திவேல் ஐயா, செரிப் ஐயா , வ. உ. சி கல்வியியல் கல்லூரி பேராசிரியர் குரு ராஜதுரை ஐயா, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தாளமுத்து நகர் கிளை தலைவர் திரு. செல்வின் ஐயா மற்றும் பலர் தங்களின் கருத்துகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.
மேலும் வருகை புரிந்திருந்த அனைவரும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
குமிழ்முனையை வாழ்த்தி புலவர் முத்துசாமி ஐயா அவர்கள் கவிதை வாசித்தார். தன்னார்வலர்களை பாராட்டி புத்தகம் பரிசளிக்கப்பட்டது. குமிழ்முனைக்கு பலர் புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.
திருச்சி தொழில் அதிபர் திரு.கோபால்தாஸ் ஐயா அவர்கள் மூலம் வந்திருந்த அனைவருக்கும் நாள்குறிப்பேடு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு நல்ல முறை நடைபெற உதவிய முன்னாள் அகில இந்திய வானொலி நிலையத் தலைவர் திரு. ராதாகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், திரு. பிரைட்சன் அவர்களுக்கும், கிளாரன்ஸ் அவர்களுக்கும், திரு. செல்வின் ஐயா அவர்களுக்கும் குமிழ்முனை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்நிகழ்வினை சிறப்பாக புகைப்படங்களைஎடுத்துக் கொடுத்த தோழர் அறிவு அவர்களுக்கும் நிகழ்வினை சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்த ஆவுடைலட்சுமி மற்றும் ரமேஷ் குழுவினருக்கும் நன்றிகள்.
நிகழ்வின் இறுதியாக குமிழ்முனை சைமன் அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு குமிழ்முனையின் இரண்டாவது பிறந்தநாள் விழா மிகவும் மகிழ்ச்சியாக செவ்வனே நிறைவு பெற்றது.


