தூத்துக்குடியில் குமிழ்முனை புத்தக வண்டியின் இரண்டாவது பிறந்தநாள்விழா சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
குமிழ்முனை வாசிப்பு வண்டி புத்தகத்தால் அலங்கரிக்கப்பட்டு விழாஅரங்கு முன்பு காட்சி படுத்தப்பட்டிருந்தது. குமிழ்முனை பதிப்பகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களும் மக்களின் பார்வைக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. அரங்கம் முழுவதும் குமிழ்முனை கடந்து வந்த பாதையை புகைப்படமாக காட்சிப்படுத்திருந்தார்கள். அரங்கமானது குமிழ்முனை எழுத்தாளர்களின் புகைப்படம் வாசகங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நிகழ்வின் தொடக்கமாக எழுத்தாளர் மோர்ஜியா அனைவரையும் வரவேற்றார். எழுத்தாளர் சுபசூரியா குமிழ்முனையின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
கலைவளர்மணி சக்திவேல் , நெடுஞ்சாலை கவிஞர். செல்வராஜ் அவர்களின் வாழ்த்து செய்தியை வாசித்தார். போராட்ட வீரர் ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது வாழ்க்கை வரலாற்றை செவ்வஞ்சலி என்ற பெயரில் சிறுபுத்தகமாக வெளியிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
எழுத்தாளர் கார்முகில் எழுதிய இந்த நூலை தேரிக்காடு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன் வெளியிட முதல் பிரதியை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றுக் கொண்டார்.

எழுத்தாளர் மோர்ஜியா அவர்கள் எழுதிய “பெண்ணே பெண்ணாய் இரு” கட்டுரைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. ஆழி மாத இதழின் ஆசிரியர் அருட் தந்தை சபின்சன் வெளியிட்டார். புத்தகத்தின் முதல் பிரதியை வ.உ.சி கல்வியியல் கல்லூரி பேராசிரியர் முனைவர் குரு ராஜதுரை , தமிழ் ஆசிரியர் கனிமொழி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

எழுத்தாளர் சுபசூரியா ரவிக்குமார் எழுதிய “கடல் கதாநாயகி” நாவலை சி.எம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கரேஸ்வரி வெளியிட முதல் பிரதியை முத்துலெட்சுமி , பபிலா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். குமிழ்முனை பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எழுத்தாளர் சைமன் அவர்கள் எழுதிய “குளிர் உதடுகள்” சிறுகதை தொகுப்பை குமிழ்முனை எழுத்தாளர்கள் வெளியிட குமிழ்முனை வாசகர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
எழுத்தாளர் திலகவதி எழுதிய குடைவரை கோயில் நூலை அறிமுகம் செய்தனர்.
புலவர் சங்கரலிங்கம், செரிப் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தாளமுத்து நகர் கிளை தலைவர் செல்வின், புலவர் முத்துசாமி, எழுத்தாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருச்சி தொழில் அதிபர்கோபால்தாஸ் மூலம் வந்திருந்த நாள்குறிப்பேடு இளம் எழுத்தாளர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
குமிழ்முனை சைமன் நன்றி கூறினார்.
குமிழ்முனை மூலமாக 50க்குமேற்பட்ட இளம் எழுத்தாளர்கள் நூல் பதிப்பிக்கப்பட்டு அவர்களை எழுத்தாளராக அறிமுகம் செய்து உள்ளார். அந்த எழுத்தாளர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பதிவிட்டது வாசகர்களால் பாராட்டு பெற்றது.


