தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள்
தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நகல், வருமானச்சான்றுடன் சிறப்பு முகாமில் கலந்து
கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்
தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் அனைத்து வட்டாரங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள்
உதவி உபகரணங்களை பெற தேர்வு செய்வதற்கு மதிப்பீடு முகாமில்
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிடவும் மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும்
அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ALIMCO (Artificial Limbs
Manufacturing Corporation of India) மூலம் கை மற்றும் கால்கள் குறைபாடுடைய
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள்,
சிறப்பு குழந்தைகளுக்கான நடமாடும் வாக்கர், சிறப்பு குழந்தைகளுக்கான சக்கர நாற்காலி CP Chair, முட நீக்கு சாதனங்கள் மற்றும் செயற்கை அவயங்கள், கால்கள், மனவவளர்ச்சி
குன்றியோருக்கான பயிற்சி உபகரணங்கள் (MSIED Kit) தொழுநோயால்
பாதிக்கப்பட்டோர்களுக்கான தினசரி பயன்பாட்டு உபகரணங்கள் மற்றும் செல்பேசி Cell Phone, பார்வையற்றவர்களுக்கான ஸ்மார்ட் ஃபோன், பார்வையற்றோருக்கான நவீன
அதிரும் மடக்கு குச்சி, காது கேளாத வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன காது
கருவி போன்றவை வழங்குவதற்கான பரிசோதனையும் / தேர்வும் மற்றும் தமிழக அரசின்
மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள், பயிற்சிகள், வேலைவாய்ப்பு , சிறப்புப்பள்ளி
சேர்க்கை, பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான
திருமண நிதி உதவி, இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெறாத
பயனாளிகள் தேவையான ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே மாற்றுத்திறனாளிகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 மற்றும் குடும்ப அட்டை
மற்றும் அதன் நகல் , ஆதார் அட்டை மற்றும் அதன் நகலுடனும் மற்றும் மத்திய அரசின்
திட்டத்தில் மேற்காணும் உபகரணங்கள் தேவைப்படுவோர் தேசிய அடையாள அட்டை மற்றும்
அதன் நகல், வருமானச்சான்று மற்றும் உடன் கீழ்காணும் விபரப்படி நடைபெறும் முகாமில்
கலந்து கொண்டு பயனடையலாம்.
வ.எண் நாள், நேரம் பகுதியின் பெயர் முகாம் நடைபெறும் இடம்:
1. 07.09.2021
செவ்வாய்
காலை 10 மணி
முதல்
1.00 மணி வரை
தூத்துக்குடி
மாநகராட்சிக்குட்பட்டப்
பகுதிகள்
தூய மரியன்னை
ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி,
மில்லர்புரம், தூத்துக்குடி
2. 08.09.2021
புதன்
காலை 10 மணி
முதல்
1.00 மணி வரை
திருச்செந்தூர்
வட்டாட்சியர்
பகுதிக்குட்பட்ட
திருச்செந்தூர் வட்டார
வளர்ச்சி அலுவலகம்
3. 09.09.2021 காலை 10 மணி
முதல்
1.00 மணி வரை
விளாத்திகுளம்
வட்டாட்சியர்
பகுதிக்குட்பட்ட
விளாத்திகுளம் வட்டார
வளர்ச்சி அலுவலகம்
4. 14.09.2021 காலை 10 மணி ஒட்டப்பிடாரம் வட்டார முதல்
1.00 மணி வரை
வட்டாட்சியர்
பகுதிக்குட்பட்ட
வளர்ச்சி அலுவலகம்
5. 15.09.2021 காலை 10 மணி
முதல்
1.00 மணி வரை
சாத்தான்குளம்
வட்டாட்சியர்
பகுதிக்குட்பட்ட
சாத்தான்குளம் வட்டார
வளர்ச்சி அலுவலகம்
6. 16.09.2021 காலை 10 மணி
முதல்
1.00 மணி வரை
கோவில்பட்டி
வட்டாட்சியர்
பகுதிக்குட்பட்ட
கோவில்பட்டி வட்டார
வளர்ச்சி அலுவலகம்
இத்தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் அவர்கள்,
தெரிவித்துள்ளார்.


