கலைமகள் இதழ் ஆசிரியர் கீழாம்பூர் அவர்களுக்குக் கோடி நன்றிகள்
கலைமகள் இதழின் ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்கள் எப்போதுமே என் மீது மிகுந்த அன்பும் பற்றும் கொண்டவர். எனது எழுத்துலக வளர்ச்சியில் அவர் பெரும் பங்கு வகிப்பவர்.
அதுபோலவே, திரு. செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களும் என்னை விகடன் இதழுக்கு அறிமுகம் செய்து, விகடன் பிரசுரத்தின் வழியாக எனது நூலை வெளியிடச் செய்தவர். சக்தி விகடன் இதழில் ‘தாமிரபரணி கரையினிலே’ என்ற தொடரை என்னை எழுத வைத்து அழகு பார்த்தவர் அவரே.
இவர்கள் இருவரும் என்னைக் காண்பதற்காக எனது ஸ்டுடியோவிற்கு வருகை தந்தார்கள். அவர்கள் இருவரையும், நான் எழுதிய ‘பொருநை அருங்காட்சியகம் 150 வருட பயணம்’ என்ற நூலைக் கொடுத்து வரவேற்றேன்.
கீழாம்பூர் அய்யா அவர்கள், நான் எழுதிய நூல்களை 2,500 ரூபாய் பணம் செலுத்திப் பெற்றுக்கொண்டார். இது எனக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. எனது நூல்களை அவர் சரியான இடத்தில் சரியான முறையில் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
தொலைதூரக் கிராமத்தில் இருக்கும் என்னைத் தேடி வந்து, எனது நூல்களை வாங்கி என்னை உற்சாகப்படுத்திய கீழாம்பூர் அய்யா அவர்களுக்கும், உடன் வந்த ஸ்ரீராம் அய்யா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


