தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உடைப்புகள் ஏற்பட்டுள்ள தாமிரபரணி ஆறு, குளம், ஏரி, வாய்க்கால், கால்வாய் மற்றும் நீர் நிலைகளை KOMATSU, ExNoRa international வழங்கியுள்ள வாடகையில்லா (ராட்சத ஹிட்டாச்சி) இயந்தின் மூலம் மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு குழு சார்பில் புணரமைத்து சரி செய்து கரையோரங்களில் பனைமர விதைகளை விதைக்கவும், வெட்டிவேர்களை நடவும் திட்டமிட்டுள்ளோம்.
அதன் தொடர்ச்சி பணியாக கடம்பா குளம் மறுகால் ஓடை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை சரி செய்து கரையை வலுபடுத்தி வருகின்றோம்.
இப்பணியை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் பாதுகாப்பு குழு தலைவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.


