ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்திடில் காவலாளிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆதிச்சநல்லூரில் இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியம் அமைக்கப்பட்டது. இந்த சைட் மியூசியத்தினை கடந்த ஆகஸ்டு மாதம் 5 ந்தேதி கனிமொழி எம்.பி முன்னிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கிவைத்தார். இந்த சைட் மியூசியம் வெளிமாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் 100 க்கு மேற்பட்டவர்கள் வந்து பார்வையிட்டனர். இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையில் இந்த சைட் மியூசியம் பாதிக்கப்பட்டது. அதை நிவர்த்தி செய்யும் பணி மந்தமாக நடைபெற்றது. மேலும் சி சைட்டில் ஆணவப்படுத்தி சைட் மியூசியம் அமைக்கும் பணியில் ஆமை வேகத்தில் நடந்தது. இதற்கிடையில் ஆதிச்சநல்லூருக்கு என ஓதுக்கப்பட்ட பணத்தினை மத்திய தொல்லியல் துறையினர் திரும்ப பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் காவலாளிகள் நிறுத்தப்பட்டனர். ஆய்வாளர்கள் திருச்சிக்கு மாற்றப்பட்டனர். இதனால் இந்தியாவிலேயே முதல் சைட் மியூசியம் என போற்றப்பட்ட ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் யாரும் கவனிப்பாரற்று போய் விட்டது. இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரனை நடந்து வருகிறது. இதுகுறித்து விரிவான செய்தியை தினகரன்நாளிதழ் வெளியிட்டு இருந்தது.
இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் இருபக்கத்தில் உள்ள மியூசியத்தினை பராமரிக்க தலா ஒரு நபரை மத்திய தொல்லியல் துறையிர் தற்போது நியமனம் செய்துள்ளனர். இவர்கள் இங்கு வரும் மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இங்கு இராமனுசம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் ஆதிச்சநல்லூர் பழங்கால நாகரிகத்தின் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ள வந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். அவர்களுடன் ஆசிரியர்கள் ஜான்ஜோசப் ராஜ், ஜெயராமன் ஆகியோர் வருகை தந்தனர்.
தொடர்ந்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதிச்சநல்லூர் அருங்காட்சியம் வாரத்தில் அனைத்து நாள்களும் திறந்து இருக்கும். அந்த சமயத்தில் கட்டணம் இல்லாமல் அனைவரும் வந்து அருங்காட்சிகத்தினை பார்வையிடலாம் என்று தெரிவித்தனர்.
இதனால் தினகரன் நாளிதழுக்கு மாணவர்கள் நன்றி கூறினர்.
நிரந்தர பணியாளர்கள் வேண்டும்.
ஆதிச்சநல்லூரை பொறுத்தவரை, பி சைட், மற்றும் சி சைட் ல் தற்போது தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்துள்ளார்கள் . இது நிரந்தர தீர்வு அல்ல. நிரந்தரமாக பணியாளர்கள் நியமனம் செய்யவேண்டும். தோட்டத்தினை பராமரிக்க தோட்டக்காரர்கள் நியமிக்க வேண்டும். பி சைட்டில் மழையில் சேதமான வேலைகளை செய்து முடிக்க வேண்டும். சி சைட்டில் முடிவடையாமல் உள்ள 80 சதவீதம் வேலைகளை செய்து முடிக்க வேண்டும். அடிக்கல் நாட்டிய உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டிடம் அடிக்கல் நாட்டியதோடு நின்று விடாமல் கட்டிடம் கட்ட மத்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.


