அன்பு தங்கை ஜா. தீபா விகடனில் திரையெல்லாம் செண்பகப்பூ என்ற தொடரை எழுத உள்ளார். இந்த நிலையில் என்னை காண அவருடைய நண்பர்களோடு செய்துங்கநல்லூரில் உள்ள எனது ஸ்டுடியோவும் இன்று காலை வந்து விட்டார். வாழ்த்துகள் தீபா. உங்கள் எழுத்துப்பயணமும், சினிமா பயணமும் வெற்றியை குவிக்கட்டும். பொன்னாடை போர்த்தி என்னுடைய புது நாவலான கள்ளிக்காடு கள்ளவாண்டனை அறிமுகம் செய்தேன். அவரோடு வருகை தந்த சகோதரிகள் சவீத்தா, ரேவதி, அகிலா ஸ்ரீதர், தமிழ் பொன்னி ஆகியோருக்கும் வாழ்த்துகள். இவர்களும் சினிமா துறையிலும் எழுத்து துறையிலும் இருக்கிறார்கள் என்பது எனக்கு கூடுதல் சந்தோசம்.
தாமிரபரணிதான் என்னையும் தங்கை ஜா.தீபாவையும் இணைத்தது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பொதிகை மலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற நிலையில் முதல் முதலாக யாத்திரையாக ஒரு பெண்ணை பொதிகை மலை அழைத்துச்சென்றோம். அந்த பெண் தங்கை ஜா.தீபாத்தான். அந்த பயணத்தினை விகடன் பிரசுரத்தில் ‘சித்தர்களின் சொர்க்கப்புரி பொதிகை மலை’ என்ற பெயரில் நூலாக எழுதியிருந்தேன். அந்த நூல் சுமார் 10 ஆயிரம் பிரதி வரை விற்று எனக்கு பெருமை பெற்று தந்தது. அந்த நூலையும் அவர்களோடு வந்த ரயில் பட அசோசியட் இயக்குனர் வசம் என் மகன் முனைவர் பட்ட ஆய்வாளர் அபிஷ் விக்னேஷ் வழங்கினார். அன்பு தங்கை செல்வியை அவர்களுக்கு அறிமுகம் செய்தேன். வருங்காலத்தில் இவரும் அவர்களை போல பெரிய எழுத்தாளராக வரவேண்டும் என அவர்கள் வாழ்த்தினார்கள். 15 நிமிடம் அவர்களோடு பேசிய தருணம் சிறப்பாக இருந்தது. அனைவருக்கும் நன்றி – அன்புடன் முத்தாலங்குறிச்சி காமராசு


