கோவில்பட்டிவில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூய்மையான இந்தியாவை உருவாக்கிட மாணவர்கள் காந்திஜியின் மாஸ்க் அணிந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கோவில்பட்டிவில் தூத்துக்குடி மாவட்ட தூய்மை பாரத இயக்கம், பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் ஸ்ரீதேவிகாயத்ரி வித்யாலயாவில் நடந்த தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் காந்திஜியின் மாஸ்க் அணிந்து மகாத்மா கண்ட கனவான தூய்மையான வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கிடவும், வாரத்தில் 2 மணி நேரம் வீதம் ஆண்டுக்கு 100 மணி நேரம் தூய்மைப் பணி செய்திடவும், தூய்மை இந்தியா திட்டத்தின் செய்தியை அனைவரிடமும் பரப்பிடவும், உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், நூலக வாசகர் வட்ட துணை தலைவர் நடராஜன், இந்தி ஆசிரியர் மணிகண்டன் உள்பட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


