மாப்பிள்ளையூரணியை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கிராமசபை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராம சபைக் கூட்டம் மேலஅழகாபுரியில் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் சரவணக்குமாா் தலைமை வகித்தாா். இதில், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களது பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தனா்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சியை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைக்கக் கூடாது, உப்பாத்து ஓடையில் உள்ள அமலைச்செடிகள், சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் உள்ளிட்ட 18 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில், தெற்கு மாவட்ட திமுக சுற்றுசூழல் அணி அமைப்பாளா் ரவி என்ற பொன்பாண்டி, மேலஅழகாபுரி ஊா் தலைவா் பாலசுந்தரம், வழக்கறிஞா்கள் மாடசாமி, சண்முக சுந்தரராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினா் வசந்தகுமாரி, மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன் சங்க செயலா் பாலமுருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.


