தூத்துக்குடியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில்கள், வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.
புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் நவராத்திரி விழா துவங்கி தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும். துர்க்கை அம்மனை 9 வடிவங்களான அவதாரத்தில் வழிபடும் நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து வீடு மற்றும் கோவில்களில் கொலு வைக்கபட்டு, ஒன்பது நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
நடப்பாண்டில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் வீடு மற்றும் கோவில்களில் கொலு வைக்கப்பட்டு, 9 நாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நவராத்திரி விழாவையொட்டி புதுகிராமம் வரதவிநாயகர் கோயிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதுபோல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஒன்பது நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.


