1876 – கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.
1894 – கொரியா தொடர்பாக சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் போர் தொடங்கியது.
1902 – பனாமா கால்வாயுக்கான உரிமையை ஐக்கிய அமெரிக்கா பிரான்சிடம் இருந்து வாங்கியது.
1902 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வொலொங்கொங் நகரில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 100 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகஸ்ட் 9 வரை நீடித்தது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.
1914 – இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1927 – சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் கொமிந்தாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
1936 – பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1941 – முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.
1944 – போலந்தில் வார்சா நகரில் நாசிகளுக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
1952 – தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.
1960 – டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1960 – பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.
1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் கொங்கோ குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
1967 – கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.
1980 – அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
2002 – தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
2004 – பரகுவேயில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் கொல்லப்பட்டு 500 பேர் காயமடைந்தனர்.
2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2007- யாழ்பல்கலைக்கழக ஊடக மாணவன் ச.நிலக்சன் அவரது வீட்டில்வைத்து படுகொலைசெய்யப்பட்டார்


