கொங்கயராகுறிச்சி அஞ்சல் நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சி அஞ்சல் நிலைய அலுவலகத்தில் புத்தாண்டு விழா கொண்டாடபட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கொங்கயராயகுறிச்சி கிளை அஞ்சல் அதிகாரி சந்திரன் தலைமை வகித்தார்.
மணக்கரை கிளை அஞ்சல் அதிகாரி காளிமுத்து, ஆழ்வார்கற்குளம் கிளை அஞ்சல் அதிகாரி பாலு முன்னிலை வகித்தனர். அஞ்சல் நிலையத்தில் கொரோனாவை ஒழிக்க உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மணக்கரை கிளை துணை அஞ்சல் அதிகாரி அவினாஷ், ஆறாம்பண்ணை துணை கிளை அஞ்சல் அதிகாரி சுளைமான், கொங்கராயகுறிச்சி துணை கிளை அஞ்சல் அதிகாரி ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாப்பட்டது. அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.


