
வசவப்பபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வசவப்பபுரம் முதியோர் கருணை இல்லத்தில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பெஜான்சிங் கண்மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
இந்த முகாமிற்கு வடக்கு வெட்டியபந்தி இந்திய தேவசபை பேராயர் டைட்டஸ் ஞானசித்தர் தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார்.
திருநெல்வேலி மாநகர உதவி ஆணையாளர் விஜயகுமார் முகாமை துவக்கி வைத்தார். 70க்கு மேற்பட்டவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் பெஜான்சிங் கண் முகாம் ஆலாசகர் சண்முகம் ஏற்பாடு செய்திருந்தார்.