
செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜ சுந்தர் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்க தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேஷ் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் செல்வி, சமுகசேவகர் சுடலை முத்து, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். சரஸ்வதி பூஜையை கருங்குளம் கணேச பட்டர் நடத்தினார் . நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துங்கநல்லூர் காவல்நிலையம் செய்திருந்தது.