கால்வாய் பரணி தமிழர் அறக்கட்டளைக்கு தூத்துக்குடியில் விருது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கால்வாய் பரணி தமிழர் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பணிகளை பாராட்டும் விதமாக தூத்துக்குடியில் எண்ணங்களின் சங்கமம் என்ற தன்னார்வ அமைப்பின் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் கொரோனா காலத்தில் சிறப்பாக சமூக சேவையில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ குழுவினருக்கு எண்ணங்களின் சங்கமம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் ஜேபி விருது வழங்கினார்.
இதில் கால்வாய் பரணி தமிழர் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. அறக்கட்டனை சார்பில் காவல்வாய் பரசிவனிடம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன், நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.