விட்டிலாபுரத்தில் போலிசார் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட விட்டிலாபுரம் கிராமத்தில் போலிசார் பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் போலிசார் பொதுமக்கள் உறவு குறித்து உரையாடினார். விட்டிலாபுரம் ஊர் மக்கள் தங்கள் ஊரில் உள்ள பிரச்சனைகளை போலிசாரிடம் தெரிவித்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக போலிசார் உறுதி அளித்தனர்.


