செய்துங்கநல்லூரில் முதியோர்களுக்கு உதவும் விதமாக புதிய பூமி தொண்டு நிறுவனம் துவக்கப்பட்டது.
ஹாசி சக்கிரியா தலைமை வகித்தார். ஹாசி எம்.என்.கே . மீரான் முன்னிலை வகித்தார். சகனா ரெய்னா ஆகிய சிறுவர்கள் நிறுவனத்தினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக செய்துங்கநல்லூர் இன்ஸ்பெகடர் ராஜசுந்தர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொண்டு நிறுவன இயக்குனர் மற்றும் தலைவர் ரிபாய், இம்ரான்கான், செயலாளர் சிவகுமார், பொருளாளர் குமாரமணியன், இயக்குனர்கள் இம்ரான்கான், மொய்தீன் இப்ராகீம் உள்பட நிர்வாகத்தினை கலந்துகொண்டனர்.
செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்க தலைவர் குமார், விட்டிலாபுரம் தலைவர் ஜெயபதி, பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த தொண்டு நிறுவனம் மூலமாக தற்போது தினமும் வீடு இல்லாத முதியோருக்கு உணவு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் முதியோர் இல்லத்தினை உருவாக்கி அதை செயல்படுத்தவும் , செய்துங்கநல்லூர் சுற்றுப்பகுதியில் உள்ள குளங்களை தூர் வார தேவையான ஜெ.சி.பிகளை தரவும், செய்துங்கநல்லூரை சாக்கடை இல்லாத நகரமாக மாற்றவும் நடவடிககை எடுக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.


