வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் சித்தர் பீடத்தில் 38 வது ஆண்டு குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு அகவல் பாராயணம் நடைபெறுகிறது. 12 மணிக்கு குருபூஜை வழிபாடு நடைபெறுகிறது. 6.30 மணிக்கு கோ பூஜை நடைபெறுகிறது. 6.45 மணிக்கு அருள் ஜோதி ஆனந்த சபையில் 1008 தீப ஜோதிவழிபாடு தொடர்ந்து நடைபெறுகிறது. திருஅருட்பா, தேவாரம், திருவாசகம், திருபல்லாண்டு பாடப்பெற்ற ஜோதி வழிபாடு மகா தீபாரதனை நடைபெறவுள்ளது. இரவு 7 மணிக்கு தஞ்சை திருமழையூர் சதாசிவம் குழுவினர் அருட்பா கச்சேரி நடைபெறுகிறது. தெடார்ந்து மங்கள இசை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தொண்டர் குலத்தினர் செய்து வருகிறார்கள்.