செய்துங்கநல்லூர் அருகில் உள்ள வி.கோவில்பத்து பஞ்சாயத்து அலுவலகம் முன்பு எரிவாயு பாதுகாப்பு முகாம் நடந்தது.
பட்டு கேஸ் கண்காணிப்பாளர் மாயாண்டி தலைமை வகித்தார். மேலாளர்மயில்ராஜ் எரிவாயு பாதுகாப்பு, சிக்கனம் குறித்து விளக்க வுரையாற்றினார். இலவச அடுப்பு சர்வீஸ் நடந்தது. ஊழியர்கள் அய்யன்பெருமாள் என்ற மணி, பட்சி ராஜன், சுடலை, ராஜா உள்பட பலர் இந்த பணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.