தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் புலமாடன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் துவக்கி வைத்தார். இதற்காக பள்ளியில் பயிலும் 401 பேருக்கு இலவச மடிக்கணினியை வழங்கினார்.
அதன்பின்னர் அவர் பேசுகையில், எடப்பாடி அரசு அம்மா செயல்படுத்தி வந்த அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையானவைகளை முறையாக வழங்கிகொண்டிருக்கும் அரசு இந்த எடப்பாடி அரசு என அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.


