தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள திருவரங்கப்பட்டியில் உள்ள திருவரங்கநேரி குளம் 42 லட்சம் ரூபாய் செலவில் குடிமராமத்து நடைபெறும் பகுதியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், முதலமைச்சரின் குடிமராத்து பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. வருகின்ற 30 ம் தேதிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளும் முடிவு பெற வேண்டும் என திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தைப்பொறுத்தவரை பொதுப்பணித்துறை குளங்கள் 37, கிராமபுற குளங்கள் 87 உள்பட 472 குளங்கள் மற்றும் கண்மாய்கள் முறையாக குடிமராமத்து பணிகள் 14 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இந்த குடிமராமத்து பணியில் குளங்களில் உள்ள முற்செடிகள் அகற்றப்பட்டு குளத்தின் கரைகள் பலப்படுத்தப்படுகிறது. குளத்தின் ஷட்டர்கள் சீரமைக்கப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தை ப்பொறுத்தவரை 70 சதவீதம் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமே மழைநீரை சேமிப்பது தான். வருகின்ற அக்டோபர் மாத பருவமழையில் வருகின்ற நீரை தேக்குவதற்கு ஏதுவாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு 120 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது. இரண்டு மாவட்டத்தை சேர்த்து நதியை தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட இருந்தது. ஆனால் பல காரணங்களால் அது நடைபெறவில்லை. வருகின்ற மழைக்காலத்திற்கு முன்னால் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி விரைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதியை தூய்மை செய்யவும், ஆற்றில் வளர்ந்துள்ள முற்செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
விரைவில் தாமிரபரணி ஆற்றினை சுத்தப்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சி தலைவர் துவங்குவார் என பொதுமக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
&&&