செய்துங்கநல்லூரில் ஊட்டசத்தின் முக்கியத்தும், ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மையம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைந்த பெண்கள் சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ச் மையத்தின் சேவைகள் பற்றி விளக்கி கூறினார். ஊட்டச் சத்து உறுதி மொழியை கருங்குளம் ஒன்றிய முக்கிய சேவிகா பாக்கியலெட்சுமி உறுதி கூறினார். நிகழச்சியில் ராணி அண்ணா பெண்கள் தையல் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவி எஸ்தர், செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறை சார்பாக செய்திருந்தனர்.