1. நல்லதொரு எழுத்தாளர் ஏரல் ராஜன்
ஏரல் ராஜன் நல்லதொரு எழுத்தாளர். முகநூல் , வாட்ஸ் அப் வழியாக பழக்கம் உண்டு. ஆனால் நேரில் பார்க்க வாய்ப்பில்லாமல் இருந்தது. ஒருவேளை எங்கேயாவது பார்த்திருப்பேன். மறந்து இருப்பேனோ என எண்ணத்தோன்றுகிறது. இன்று மாலை 4 மணி அளவில் செய்துங்கநல்லூரில் உள்ள எனது ஸ்டுடியோ வந்திருக்கிறார். அவர் எழுதிய மாநாட்டு கம்மாளர் நூலைத் தந்துள்ளார்கள்.
அருமையான நூல் ஒரு புரட்டு புரட்டினேன். அதில் என் கண்ணில் பல அற்புத தகவல்கள் தென்பட்டது. அவருக்கு இது ஏழாவது நூல். முழுக்க ஆசாரிமார்கள் பற்றிய நூலையே எழுதி வருகிறார். எவர் ஒருவன் தனது இனத்தினை பற்றி மிக நன்கு அறிகிறாரோ, அவரே பிறரைப் போற்றி பாதுகாக்கத் தகுதி பெற்றோர் என நம்புவேன். அந்த அளவில் இந்த நூல் இருந்தது. தன் இனத்தினை பற்றி எழுதுகிறேன் எனப் பல சமூகத்தினை மனவேதனை அடையச் செய்யும் நூல் ஆசிரியர்கள் மத்தியில் மிகச்சிறப்பான நூலை வெளிகொண்டு வந்துள்ளார் நண்பர் ஏரல் ராஜன். வாழ்த்துகள் விரைவில் ஒரு நாள் நேரில் சந்திப்போம்.


