ஆதிச்சநலலூர் உள்பட 430 இடங்களில் வாட்சுமேன் நியமிக்க: உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் 430 தொல் லியல் இடங்களை பாது காக்க வாட்ச்மேன்களை நியமிக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை தாக் கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூரில் வசிக்கும் முத்தாலங்குறிச்சி காமராசு என்ற காமராஜ் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு மேற் கொள்ளப்பட்டது. அதற்குரிய அறிக்கையை மத்திய தொல்லியல்துறை தர வேண்டும். அகழாய்வை தொடர வேண்டும். சிவகளை யில் அகழாய்வு நடத்தி அறிக்கை வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண் டும் என இந்நீதிமன்றத் தில் மனு செய்தேன்.
இந்த வழக்கு மீது 2019 ஏப் 25ல் இரு நீதிபதிகள் அமர்வு, “தமி ழகத்திலுள்ள 430 தொல் லியல் இடங்களை பாது காக்க, வாட்ச்மேன்களை நியமிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் மத் திய, மாநில தொல்லியல் து றைகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவ டிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என்று குறிபிட்டு இருந்தார்.
இந்தவழக்கு 22.07.2029 அன்று நீதிபதிகள் சி.வி.கார்த் திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனு தாரர் தரப்பு வழக்கறிஞர் சகா ஆஜரானார்.
இதுகுறித்து நீதிபதிகள் உத்தரவு பிரபித்தனர். இந்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மேற் கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய தொல்லியல்துறை இயக்குனர் ஜெனரல், தமிழக தொல்லியல் துறை முதன்மை செயலர் ஆக., 6 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
தற்போது ஆதிச்சநல்லூரில் தற்காலக வாட்சுமேன் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


