ஒரு கிராமத்தின் வளர்ச்சி என்பது அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் முயற்சியால் மட்டும் கிடைத்து விடாது அந்த ஊரின் தலைவர்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அந்த ஊரின் கிராம நிர்வாக அலுவலர் இவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் கட்டாயம் அந்த கிராமம் வளர்ச்சி பெரும் …
பொதுவாகவே ஒரு கிராமத்தை நிர்வகிக்கும் நிர்வாக அலுவலர் என்பவரின் வேலை என்பது அதிக சுமை கொண்டது அதில் அவர்களுக்கான அதிகாரத்தையே அவர்களால் கையாள்வது பெரும் சவாலாக இருக்கும் அப்படி இருக்கும் பட்சத்தில்…
ஒரு கிராம நிர்வாக அதிகாரி தான் பணி செய்யும் கிராமத்தில் நல்ல கல்வி அறிவு மற்றும் நல்ல உடல் திறனுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மூன்று மாத பயிற்சி கொடுத்து அதோடு மட்டும் இல்லாமல்…
பக்கத்து ஊர்களில் இருந்தும் பல இளைஞர்களை அழைத்து அனைவரையும் அரசு தேர்வுக்கு தயார் படுத்திவருகிறார் இந்த நிலையில் இவரிடம் பயிற்சி முடித்த சுமார்
30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை அரசுப்பணியில் சேர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…
அப்படிப்பட்ட ஒரு சிறந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு அவரிடம் பயிற்சி முடித்து விட்டு அரசுப்பணியில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள் தான் உள்ளபடியே அந்த கிராம நிர்வாக அதிகாரியை கவுரவிக்க வேண்டும் ஆனால் இங்கு நடந்தது வேறு…
இவரிடம் பயிற்சி முடித்து அரசுப்பணியில் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து இவரே கவுரவப்படுத்தி விழா எடுத்துள்ளார் ஆம் அவர் வேறு யாரும் அல்ல…
அந்த பெருமைக்குரிய #அதிகாரி பணிபுரியும் கிராமம் எனது #கால்வாய் கிராமம் அந்த அதிகாரியின் பெயர் திரு #சிவராமன் அவர்கள்தான்…
இப்படிப்பட்ட நற்சிந்தனை கொண்ட மனிதர்கள் ஒவ்வொரு கிராத்திற்கும் அதிகாரியாக கிடைத்தால் அதுவே பெரிய வரம் அந்த வகையில் எனது கிராமம் இவர் புகழை எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் வாழ்த்துக்கள் திரு.சிவராமன் சார் …
இந்த கண்ணியமிக்க அதிகாரியின் முயற்சியால் எனது கிராமத்தில் இதுவரை 5 பேர் அரசுப்பணியில் சேர்ந்து உள்ளனர் அது மட்டுமல்ல இந்த கற்போம் கற்பிப்போம் என்ற பெற்றோர்களை கவுரவிக்கும் விழாவும் எனது கிராமத்தின் பெயரிலேயே நடந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது…
என்றென்றும் நன்றியுடன்
கால்வாய் சிவா


