செய்துங்கநல்லூரில் உள்ள கருங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் சார்பில் சமையல் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கருங்குளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர். போட்டியை ஒன்றிய ஆணையாளர் சிவராஜன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பு லெட்சுமி துவக்கி வைத்தார். போட்டியில் முளைகட்டிய பயிறு வகைகள், கீரை வகைகள், காய்கறி சூப் போன்ற சமையல்கள் இடம்பெற்றன. இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார அரசு ஊழியர் சங்க தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் துரைபாண்டி, வட்டார செயலாளர் வேல் முருகன் உள்பட அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர். செய்துங்கநல்லூர் ஆர்.சி பள்ளி மாணவ மாணவிகளும் சமையல் கண்காட்சியை பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சத்துணவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுல்தான் செய்திருந்தார்.