செய்துங்கநல்லூர் அருகில் உள்ள நாட்டார்குளத்தில் ஜோஸ் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி முதல்வர் ஜெய்தூண்பீவி தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். துணை முதல்வர் பிச்சம்மாள் முன்னிலை வகித்தார். கணித ஆசிரியை மகாலெட்சுமி மழை நீர் சேகரிப்பின் பயன் குறித்து பேசினார். பேரணி பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கி, நாட்டார்குளம், இந்திராநகர் உள்பட பல பகுதி வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் நீரின் முக்கியத்துவம் குறித்து கோஷம் எழுப்பபட்டது. கணினி ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.