கருங்குளம் செல்வ விநாயகர் கோயிலில் ஆயுத பூஜை விழா நடந்தது. இதையொட்டி விநாயகருக்குச் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன் பின் 100 மாணவர்களுக்கு இலவச எழுது பொருள் வழங்கப்பட்டது. சின்னத்துரை தலைமை வகித்தார். பஞ்சாயத்து எழுத்தர் சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மாணவர்களுக்கு இலவச எழுதப் பொருள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இசக்கிமுத்து, வெங்கடாசலம், மாரீஸ்வரன், மணிகண்டன், ஆண்டி செல்வம், சுதாகர் , சின்னத்துரை உள்படப் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கர பாண்டியன் தலைமையில் பகதர்குழுவினர் கலந்துகொண்டனர்


