ஸ்ரீ வைகுண்டம் தாலூகாவில் மிகச்சிறப்பாக பணியாற்றி அலுவலர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடந்தது. வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். நலிவோர் திட்ட வட்டாட்சியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் ஆய்வாளர் கண்ணபிரான் அலுவலர்களுக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் வே. ப்ரீத்தா மகாராசி, ப. முருக லெட்சுமி, வட்டசார் ஆய்வாளர் மீனாகுமாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முத்தாலங்குறிச்சி கந்தசுப்பு, கால்வாய் சிவராமன், வேளூர் புதுக்குடிசக்தி வேல், ஆறாம் பண்ணை மரிய சித்ர கமலராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கிராம உதவியாளர்கள் ஆறாம் பண்ணை சரத்குமார், கொங்கராயகுறிச்சி ஆனந்த பத்மநாபன், செய்துங்கநல்லூர் சோமசுந்தரம் ஆகியோருக்கும் தெய்வசெயல்புரம் குறுவட்ட ஆய்வாளர் வெள்ளத்தாய், அலுவலக உதவியாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழ் பெற்றவர்களை சக ஊழியர்கள் பாராட்டினார்கள்.


