சாத்தான்குளம் அருகே ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரம் அடித்து உடைப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் கிராமத்தில் கனரா வங்கி ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்கி ஏடிஎம்மில் மர்ம நபர் ஒருவர் பணம் எடுக்க வந்துள்ளார். அந்த நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை எனக் கூறப்படுகின்றது. இந்த நிலையில் பணம் எடுக்க வந்த மர்மநபர் ஏடிஎம்மில் எவ்வளவு முயற்சி செய்தும் பணம் இல்லாத காரணத்தால் ஆத்திரத்தில் கல்லை எடுத்து ஏடிஎம் இயந்திரத்தை அடித்து உடைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தவரை வலைவீசித் தேடி வருகின்றனர். பேய்க்குளம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தைக் கல்லால் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


