தூத்துக்குடி மாவட்டப் புதிய காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ள அபிஷேக் குப்தாவை வடக்கு திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி-யாகப் பொறுப்பேற்றுள்ள அபிஷேக் குப்தாவை இன்று மாவட்டக் காவல் துறை அலுவலகத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னா்ள அமைச்சருமான கீதாஜீவன், நேரில் சந்தித்து புதிய எஸ்பி-க்கு மலர்க்கொத்து வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் விளாத்திகுளம் மார்க்கண்டேயன், கோவில்பட்டி கருணாநிதி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலர் எஸ்பி உடன் இருந்தனர்.


