கோவில்பட்டி ஆயிர வைசிய துவக்கப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
கோவில்பட்டியில் புத்துயிர் இரத்ததானக் கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பாக ஆயிர வைசிய துவக்கப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழக செயலாளர்க தமிழரசன் தலைமை வகித்தார், முகாமில் கலந்து கொண்ட 38 பேருக்கு மருத்துவர் தரணி கண் பரிசோதனை செய்தார். 8 பேர் மேல் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
முகாமில் தமிழ்நாடு காமராஜர் பேரவை தலைவர் நாஞ்சில் குமார், கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நல சங்கத் தலைவர் செண்பகம், இந்திய கலாச்சார நட்புறவுக் கழக நிர்வாகி நல்லையா, ஆவல்நத்தம் லட்சுமணன், செவிலியர்கள் சித்ரா, ஜெயராணி, தர்ஷினி, ஒருங்கிணைப்பாளர் தங்கமுனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


