செய்துங்கநல்லூரில் உள்ள ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 21ந்தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
தமிழக அரசு இளைஞர் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் செயல்படுத்தி வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்பு பயிற்சிகளை அளித்தும், வேலை வாய்ப்பு முகாம்களின் மூலம் நேரடி வேலை வாய்ப்பையும் அளித்தும் வருகிறது. அதன்படி 21 ந்தேதி காலை 9 மணிக்கு செய்துங்கநல்லூர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் வைத்து வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட தற்போது முன்னிலையில் உள்ள பல நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ப ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே 18 வயதுக்கு மேல் 8 ம் வகுப்பு தேறியவர்கள் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த தகுந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த முகாமில் தவறாது கலந்து கொண்டு தகுந்த வேலை வாய்ப்பை பெற்று வாழ்வில் வளம் பெறுமாறு கேட்டு கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தூத்துக்குடி திட்ட அலுவலர் செய்து வருகிறார். தொடர்ப்புக்கு 9442822522, 9578795367 என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளலாம்.