தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் நூலகக் குழு சார்பில் தேசிய நூலகர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மாணவிகளிடையே “பக்கங்களைக் கடந்து பயணிக்கும் அனுபவம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் சூர்யகலா நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். நூலகர் பொன்செல்வி வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் பேராசிரியைகள் முனைவர் லாவண்யா, முனைவர் சுதாகுமாரி மற்றும் எழுத்தாளர் மணிமொழிச்செல்வன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளைக் கல்லூரிச் செயலாளர் முரளிதரன் தலைமையில், முதல்வர் சூர்யகலா, பேராசிரியர்கள் மற்றும் நூலகர்கள் ஒருங்கிணைத்துச் செய்திருந்தனர்.


